Friday, September 20, 2013

ரஹ்மானின் ஸ்கி‌ரிப்டை இயக்குகிறார் ராஞ்சனா இயக்குனர்?

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்காக ஸ்கி‌ரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதும் தனது ஒய்எம் புரொடக்சன் சார்பில் ஆரோஸ் இன்டர்நேஷனல்ஸுடன் இணைந்து தயா‌ரிப்பதும் நாம் அறிந்ததே. இந்தப் படத்தை யார் இயக்குவார் என்பது தெ‌ரியாமல் இருந்தது.
இந்நிலையில் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் பெயர் முன்மொழியப்பட்டிருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் ஏற்கனவே இரு படங்கள் இயக்கியிருந்தாலும் 2011ல் வெளியான அவ‌ரின் தனு வெட்ஸ் மனு படமே அவரது பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ராஞ்சனா மிகப்பொpய வெற்றியை பெற்றது. தற்போது தனு வெட்ஸ் மனு படத்தின் சீக்வெலை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ரஹ்மான் தனது கதையை இயக்க ஆனந்த் எல்.ராயை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கதாநாயகனாகும் சந்தானம்

தமிழ் சினிமாவில் ‘மன்மதன்’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். அதன்பிறகு தற்போது முன்னணி கமெடி நடிகராக விளங்கி வருகிறார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் சேர்ந்து துணை கதாநாயகன் போன்றே நடித்து வருகிறார்.
‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தை தயாரித்து பவர் ஸ்டார் உடன் சேர்ந்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
காமெடி நடிகர்கள் முன்னணியாக திகழும்பொழுது அவர்களுக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆசை வருவது புதிதல்ல. நாகேஷ் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். வடிவேல் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்திலும், கருணாஸ் ‘திண்டுக்கல் சாரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்தனர். இப்படங்கள் வெற்றி பெற்றது.
இந்த வரிசையில் சந்தானமும் இணைகிறார். அவர் ஹீரோவாகும் படத்துக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என பெயரிட்டுள்ளனர். ஸ்ரீநாத் இயக்குகிறார்.

சர்ச்சையை கிளப்பிய சமீராவின் உடை

பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை விளம்பரப்படுத்த நடந்த பேஷன் ஷோவில் சமீரா ரெட்டி அணிந்து வந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதுசார்பாக நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் நிறத்தில் நெட்டட் உடை அணிந்து வந்ததிருந்தார் சமீரா. உடை ஒன்றும் பெ‌ரிய அளவில் ஆபாசமானதல்ல. ஆனால் சில இணைய விஷமிகள் காஸ்ட்யூமில் தங்களின் கைவ‌ரிசையை காட்டி ஆபாசமாக சித்த‌ரித்தனர். அது சர்ச்சையை கிளப்பியது.
நான் எப்படி உடை அணிய வேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம் என காட்டமாக பதிலளித்திருக்கிறார் சமீரா.

Saturday, September 7, 2013

அமலா பால்-டுவிட்டரை கலக்கும் புகைப்படம்

மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மைனா, தெய்வத்திருமகள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ரஜினி, கமல் வாக்களித்தனர்

பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
நீதிபதிகள் எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரிகளாக இருந்து இந்த தேர்தலை நடத்தினர். வாக்கு சாவடியில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது, ஏராளமான பொலிசாரும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர்.
வாக்குப்பதிவு நடந்த இடத்தில் ஏராளமான தயாரிப்பாளர்கள் திரண்டு நின்று தங்கள் அணிக்கு ஆதரவு

ஜில்லா படத்தில் அரசியல் காட்சிகளா?

 அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் நேசன்.

விஜய்யின் தலைவா படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து சமீபத்தில் தான் வெளியானது.
இதனையடுத்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி

Friday, September 6, 2013

கமலஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு

கமலஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கு முஸ்லிம் லீக் எதிர்ப்பு
கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘விஸ்வரூபம்’ படத்தின் முதல் பாகத்துக்கும் இதுபோல் சர்ச்சைகள் ஏற்பட்டன. முஸ்லிம்களை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சினிமாவில் ரூ.20 கோடி இழந்து விட்டேன்: பவர் ஸ்டார் சீனிவாசன்

  
மோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவந்தார். தொடர்ந்து படங்களில் நடிக்கப் போவதாக கூறினார். பவர் ஸ்டார் சீனிவாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

3 அணிகள் மோதும் படஅதிபர் சங்க தேர்தல்: போலீஸ் பாதுகாப்புடன் நாளை நடக்கிறது

3 அணிகள் மோதும் படஅதிபர் சங்க தேர்தல்: போலீஸ் பாதுகாப்புடன் நாளை நடக்கிறது   
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை (7–ந்தேதி) நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 4 மணிவரை நடக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 832 பேருக்கு மட்டுமே ஓட்டு போட தகுதி உள்ளது. ஓட்டுப்பதிவில் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு

ரூ.1 1/2 கோடி சம்பளம் கேட்டதால் காஜல்அகர்வாலுக்கு படங்கள் குறைந்தது


  நடிகை காஜல்அகர்வால் ரூ.1½ கோடி சம்பளம் கேட்பதால் படவாய்ப்புகள் குறைந்துள்ளது. இவர் சரோஜா படத்தில் கவுரவ தோற்றத்தில் தான் வந்தார். தெலுங்கில் நடித்த ‘மகதீரா’ படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் உச்சத்துக்கு போனார். தமிழில் ஹிட்டான துப்பாக்கி படம் காஜல்

தமிழ் படத்தில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி: மதுபாலா


நடிகை மதுபாலா மீண்டும் நடிக்கிறார். 1990–களில் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். தமிழில் நடித்த ‘ரோஜா’, ‘ஜென்டில் மேன்’ படங்கள் வெற்றிகரமாக ஓடின. மதுபாலாவுக்கு 1999–ல் திருமணம் நடந்தது. கணவர் ஆனந்தஷா. இவர்களுக்கு

திரிஷாவுக்கு விரைவில் திருமணம்

  திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகர் ராணா என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சம காலத்து நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, லைலா, ரம்பா, மீனா போன்றோர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை

மருதநாயகம் ‘கிளாடியேட்டர்’ படத்தைப்போல் இருக்கும்

உலகநாயகன் கமல்ஹாசனின் லட்சியப் படமான ‘மருதநாயகம்’ 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவில்லை. இதுபற்றி கமல்ஹாசன் ஏற்கனவே அளித்த பேட்டியில் என்றாவது ஒருநாள் மருதநாயகம் படத்தை

தேர்தலில் குறிப்பிட்ட அணிக்கு ஆதரவா?: நடிகர் விஜய் விளக்கம்

    நடிகர் விஜய்யின் ‘தலைவா’ படம் சர்ச்சைகளில் சிக்கி பிறகு ரிலீசானது. தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் தனது பெயர் இழுக்கப்பட்டுள்ளதாக விஜய் கூறினார்.

‘கொலவெறி’ நாயகனுக்கு இசையமைப்பாளர்கள் மத்தியில் மவுசு

பல்வேறு பொழுதுபோக்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ், ‘கொலவெறி’

மீண்டும் நடிக்க வருகிறார் ஜீவன்

  ‘யுனிவர்சிட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜீவன். தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘திருட்டுப்பயலே’, ‘நான் அவனில்லை‘, ‘தோட்டா’, ‘மச்சக்காரன்’ ஆகிய படங்களில் நடித்தார். ஆரம்பம் முதலே தமிழ் சினிமாவில் இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்திமாகவே அமைந்த

ஒரே படத்தில் பிரபலமான நஸ்ரியா நசீம்

 மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் நஸ்ரியா நசீம். ‘நேரம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்துவிட்டார். இப்போது, மலையாளத்திலும், தமிழிலும் குறிப்பிடத்தக்க அளவு படங்களை அதுவும் முன்னணி நடிகர்களுடன் இவர் கைவசம்

சஞ்சய் தத் அறிமுகமாகிய ‘கவாலி’ பாடல் சஞ்ஜீர் படத்தில் ரீமேக் ஆகிறது


மும்பை,
இந்தி நடிகர் சஞ்சய் தத் முதன் முதலில் அறிமுகமான ‘கவாலி’ பாடல் அடுத்து அவரது நடிப்பில்

விஷால்–ஆர்யா–பரத் மோதுகிறார்கள்; செப்டம்பர் வெளியீடாக 17 படங்கள் தியேட்டர்களுக்கு அடிதடி நடக்கிறது

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/arya.jpg

சென்னை,
செப்டம்பர் வெளியீடாக விஷால், ஆர்யா, பரத் நடித்த படங்கள் உள்பட மொத்தம் 17 படங்கள் திரைக்கு

மும்பை திரைப்பட திருவிழா 2013ல் நடுவராக கொன்கனா சென் சர்மா

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Konkana02.jpg

மும்பை,
மும்பையில் 15வது மும்பை திரைப்பட திருவிழா 2013 என்ற நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 17 முதல் 24ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.  இதில் வெளிநாட்டு திரைப்பட பிரபலங்களான இயக்குனர் புரூஸ் பெரஸ்போர்டு, பிரான்ஸ் நாட்டு நடிகை நடாலி பேயி, ஜப்பான் நாட்டு நடிகரும், இயக்குனருமான மசாட்டோ ஹரடா மற்றும் ஈரான் நாட்டு இயக்குனர் அஸ்கார் பர்ஹடி ஆகி

மம்முட்டி-ரஜினி கூட்டணி போல் மோகன்லால்-விஜய் கூட்டணி அமையும் இயக்குனர் நேசன்


அசோக்–விசாகா ஜோடியாக நடிக்க, ‘முருகா’ படத்தை