Friday, September 20, 2013

ரஹ்மானின் ஸ்கி‌ரிப்டை இயக்குகிறார் ராஞ்சனா இயக்குனர்?

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவுக்காக ஸ்கி‌ரிப்ட் ஒன்றை எழுதியிருப்பதும் தனது ஒய்எம் புரொடக்சன் சார்பில் ஆரோஸ் இன்டர்நேஷனல்ஸுடன் இணைந்து தயா‌ரிப்பதும் நாம் அறிந்ததே. இந்தப் படத்தை யார் இயக்குவார் என்பது தெ‌ரியாமல் இருந்தது.
இந்நிலையில் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் பெயர் முன்மொழியப்பட்டிருக்கிறது.
ஆனந்த் எல்.ராய் ஏற்கனவே இரு படங்கள் இயக்கியிருந்தாலும் 2011ல் வெளியான அவ‌ரின் தனு வெட்ஸ் மனு படமே அவரது பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதன் பிறகு அவர் இயக்கிய ராஞ்சனா மிகப்பொpய வெற்றியை பெற்றது. தற்போது தனு வெட்ஸ் மனு படத்தின் சீக்வெலை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ரஹ்மான் தனது கதையை இயக்க ஆனந்த் எல்.ராயை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

கதாநாயகனாகும் சந்தானம்

தமிழ் சினிமாவில் ‘மன்மதன்’ படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம். அதன்பிறகு தற்போது முன்னணி கமெடி நடிகராக விளங்கி வருகிறார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் கதாநாயகன் சேர்ந்து துணை கதாநாயகன் போன்றே நடித்து வருகிறார்.
‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ படத்தை தயாரித்து பவர் ஸ்டார் உடன் சேர்ந்து நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
காமெடி நடிகர்கள் முன்னணியாக திகழும்பொழுது அவர்களுக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆசை வருவது புதிதல்ல. நாகேஷ் ‘எதிர்நீச்சல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். வடிவேல் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்திலும், கருணாஸ் ‘திண்டுக்கல் சாரதி’ படத்திலும் கதாநாயகனாக நடித்தனர். இப்படங்கள் வெற்றி பெற்றது.
இந்த வரிசையில் சந்தானமும் இணைகிறார். அவர் ஹீரோவாகும் படத்துக்கு ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என பெயரிட்டுள்ளனர். ஸ்ரீநாத் இயக்குகிறார்.

சர்ச்சையை கிளப்பிய சமீராவின் உடை

பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை விளம்பரப்படுத்த நடந்த பேஷன் ஷோவில் சமீரா ரெட்டி அணிந்து வந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிளண்டர்ஸ் பிரைட் விஸ்கியை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் அதுசார்பாக நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் நிறத்தில் நெட்டட் உடை அணிந்து வந்ததிருந்தார் சமீரா. உடை ஒன்றும் பெ‌ரிய அளவில் ஆபாசமானதல்ல. ஆனால் சில இணைய விஷமிகள் காஸ்ட்யூமில் தங்களின் கைவ‌ரிசையை காட்டி ஆபாசமாக சித்த‌ரித்தனர். அது சர்ச்சையை கிளப்பியது.
நான் எப்படி உடை அணிய வேண்டும் என்று யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம் என காட்டமாக பதிலளித்திருக்கிறார் சமீரா.