Saturday, September 7, 2013

அமலா பால்-டுவிட்டரை கலக்கும் புகைப்படம்

மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மைனா, தெய்வத்திருமகள் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார்
, தற்போது புது ஹேர்ஸ்டைலுடன் வலம் வருகிறார்
சமீபத்தில் இவர் நடித்த தலைவா படம் வெளியானது.
இந்நிலையில் தனுசுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக தனது ஹேர்ஸ்டைலை வித்தியாசமாக மாற்றி அமைத்து வருகிறார்.
பொதுவாக இவரது ஹேர்ஸ்டைல்கள் அனைத்தும் சற்று சுருண்டு நெளிந்து அலைபாயும் கூந்தலாகவே இருக்கும்.
ஆனால் இந்த புதிய ஹேர்ஸ்டைலோ சற்று வித்தியாசமாக உள்ளது.
இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, புதிய ஹேர்ஸ்டைல், புது லுக்குடன், தயாராகிவரும் புதிய படத்திற்குத் தயாராகி விட்டேன்.
இந்த ஹேர்கட் மூலம் என்னை நானே புதுப்பித்துக் கொண்டது போன்று புத்துணர்ச்சியோடு உணர்கிறேன்.
எனக்குள் இருக்கும் மழலைத்தன்னைமையை இந்த ஹேர்ஸ்டைல் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments: