Friday, September 6, 2013

சஞ்சய் தத் அறிமுகமாகிய ‘கவாலி’ பாடல் சஞ்ஜீர் படத்தில் ரீமேக் ஆகிறது


மும்பை,
இந்தி நடிகர் சஞ்சய் தத் முதன் முதலில் அறிமுகமான ‘கவாலி’ பாடல் அடுத்து அவரது நடிப்பில்
வர இருக்கும் ‘சஞ்ஜீர்’ படத்தின் ‘‘கோச்சேய் பதான் கி சுபான்’’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளது.
கவாலி பாடல்
இந்தி நடிகர் சஞ்சய் தத் முதன் முதலில் அறிமுகமான படம் ‘ரேஷ்மா அவுர் ஷேரா’. 1972–ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத் இயக்கி நடித்தார். இப்படத்தில் அறிமுகமான போனபோது சஞ்சய் தத்தின் வயது 13. இந்த படத்தில் சஞ்சய் தத் நடனமாடிய ‘கவாலி’ பாடலை எவராலும் மறந்துவிட முடியாது. மேலும் மெகா ஸ்டார் அமித்தாப் பச்சன், வினோத் கண்ணா, வகீதா ரஹ்மான் மற்றும் ராக்கி உள்பட பல பிரபலங்களின் நடிப்பில் இந்த படம் மெகா ஹிட்டானது.
ரீமேக்
சஞ்சய் தத் சினிமாவிற்கு வந்து 41 ஆண்டுகள் கடந்து விட்டன. அவர் இதுவரை 150–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான ரேஷ்மா அவுர் ஷேராவில் தான் நடனமாடிய ‘கவாலி’ பாடலை ரீமேக் செய்ய முடிவு எடுத்தார். எனவே தனது நடிப்பில் அடுத்து வர இருக்கும் சஞ்ஜீர் படத்திலேயே அந்த பாடலை ரீமேக் செய்ய திட்டமிட்டு ‘‘கோச்சேய் பதான் கி சுபான்’’ என்ற பெயரில் இந்த பாடல் ரீமேக் ஆகியுள்ளது.
சஞ்ஜீர் படத்தில் சஞ்சய் தத்துடன் ராம் சரண், பிரியங்கா சோப்ரா, பிரகாஷ் ராஜ், மகியே கில் மற்றும் அடுல் குல்கர்னி உள்பட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். வருகிற 6–ந் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

No comments: